இந்த உலகத்திற்கு என்ன நடக்கும் என்று கவலைப்படுவதற்கு பதிலாக, உங்களது ஆயுட்காலம் குறுகிய காலம் மட்டுமே. வெறும் ஐம்பது, அறுபது ஆண்டுகள் வரை மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் ஹரே கிருஷ்ணா என்று புனித திருநாமத்தைக் கூறிக்கொண்டு கடவுளிடம் திரும்பிச் செல்லுங்கள். இந்த உலகிற்கு என்ன நடக்கும் என்று கவலை கொள்ள வேண்டாம். இயற்கை பார்த்துக் கொள்ளும். இத்தகைய எண்ணங்களால் உங்களது மூளையை குழப்பிக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆயுட்காலத்தை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் திரும்பிச் செல்வது மட்டுமே உங்களது ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். உலகில் நடப்பவற்றை உங்களால் கட்டுப்படுத்த இயலாது. நடப்பவை நடந்து தான் தீரும். இத்தகைய நிலையில் உங்களது வாழ்க்கையை சீரமைத்துக் கொள்வது மட்டுமே சிறப்பான செயலாகும். இதனைத் தான் பலரும் "முதலில் உங்களை நன்கு சீரமையுங்கள்" என்று கூறுவார்கள். மக்கள் அயோக்கியத்தனமான வாழ்க்கை நாகரீகத்தை பின்பற்றுவதால், இயற்கையின் விளைவுகளை அவர்கள் எதிர்கொள்ளுவார்கள்.
|