TA/750222 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் கராகஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த நவீன நாகரீகம், அவர்கள் ஆன்மீக ஆன்மாவை கவனிப்பதில்லை; அவர்கள் வெறுமனே இந்த இயந்திரத்தை, உடலை கவனித்துக் கொள்கிறார்கள். ஆகையினால் அங்கே பிரச்சனைகள் இருக்கின்றன. நீங்கள் கேட்டீர்கள் 'பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது?' அந்த பிரச்சனைகள் அங்கிருக்க காரணம் இதனால், அதாவது அவர்கள் ஓட்டுனரை கவனித்துக் கொள்ளவில்லை, அவர்கள் வெறுமனே இந்த இயந்திரத்தை, உடலை கவனித்துக் கொள்கிறார்கள். எனவே நீங்கள் ஓட்டுனரை கவனித்துக் கொண்டால், பிறகு அவர் புத்திசாலியாக இருப்பார், அவர் நன்றாக ஓட்டுவார், உடல் பேரழிவை எதிர்கொள்ளாது, அவன் அமைதியாக வாழ்வான். இதுதான் பிரச்சனை. ஓட்டுனர் கவனமாக இருந்தால், பிறகு, காருக்காக அவருக்கு அடிக்கடி இயந்திர பொறியாளர் தேவைப்படாது. அவர் இயந்திரத்தை ஒழுங்காக வைத்துக் கொள்வார். அவர் புத்திசாலியாக இருந்தால், பிறகு அவர் இயந்திரத்தையும் நன்றாக கவனித்துக் கொள்வார்."
750222 - உரையாடல் - கராகஸ்