TA/750222b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கராகஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"முதலில், அங்கீகாரம் பெற்றவர்களிடமிருந்து நாம் பகவானைப் பற்றி கேட்க வேண்டும். பிறகு கீர்தனம். கீர்தனம் என்றால் பகவானின் செயல்பாடுகளை மகிமைப்படுத்துவது. பிறகு இன்னும் பல உள்ளன. இந்த இரண்டு விஷயங்களும் மிகவும் முக்கியமானவை, மேலும் இன்னும் பல விஷயங்களும் இருக்கின்றன. ஸ்மரணம்— ஸ்மரணம் என்றால் தியானம். வந்தனம் என்றால் பிரார்த்தனை வழங்குதல். எனவே ஸ்மரணம்ʼ வந்தனம்ʼ தாஸ்யம் அர்சனம். அர்சனம், வெறும் ஸ்ரீமூர்த்தி வழிபாடு. இன்னும் பல விஷயங்களும் இருக்கின்றன. இவ்வாறாக அங்கே ஒன்பது விஷயங்கள் உள்ளன. எனவே ஒருவர் பகவானைப் பற்றி புரிந்துக் கொள்ள ஆர்வம் கொண்டிருந்தால், அவன் இந்த விஷயங்கள் அனைத்தையும், அல்லது சிலவற்றை, அல்லது குறைந்தபட்சம் ஒன்றாவது ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆக மிகவும் முக்கியமான விஷயம் ஶ்ரவணம், அல்லது கேட்பது. நீங்கள் வேறு எதையும் செய்யவில்லை என்றால், வெறுமனே, உண்மையாக பகவானைப் பற்றி கேட்டால், பிறகு படிப்படியாக நீங்கள் பகவான் உணர்வு பெறுவீர்கள். அதுவும் பௌதிக விஞ்ஞானத்தில் உண்மையாகும். மாணவர்கள் பள்ளிக்கூடம், கல்லூரிக்கு சென்று, மேலும் பேராசிரியர்களிடமிருந்து கேட்கிறார்கள், மேலும் படிப்படியாக அந்த பாடத்தில் கற்றறிந்தவர்களாகிறார்கள். குறிப்பாக இந்த யுகத்தில், ஶ்ரவணம், அல்லது கேட்பது, மிக, மிக முக்கியமாகும்."

750222 - சொற்பொழிவு Initiation - கராகஸ்