TA/750223 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கராகஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"சமஸ்கிருதம் மொழி என்றால், வேத இலக்கியம், தர்மா என்றால் குறியீடுகள் அல்லது பகவானால் அளிக்கப்பட்ட சட்டம். எனவே ஒருவருக்கு நம்பிக்கை இருக்கலாம் அல்லது ஒருவருக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம்; அது முக்கியமல்ல. குறியீடுகள் அல்லது பகவானால் அளிக்கப்பட்ட சட்டம், அது உண்மையானது. எவ்வாறு என்றால் மாநிலத்தால் வழங்கப்பட்ட சட்டம் போல: ஒருவருக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம், அல்லது ஒருவருக்கு நம்பிக்கை இருக்கலாம், ஆனால் அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். உதாரணத்திற்கு, வீதிகளில் நாம் காண்கிறோம், "வலது பக்கம் செல்லவும்." இது மாநிலத்தால் வழங்கப்பட்ட சட்டம். எனவே நீங்கள் இதை நம்பலாம் அல்லது நம்பாமல் போகலாம்; நீங்கள் பின்பற்றியே ஆக வேண்டும். எனவே அது எந்த சூழ்நிலையிலும் மாற்றப்படக் கூடாது. ஆகையினால் தர்மா என்றால் நம்பிக்கை அல்ல. அது கட்டாயம்.
எனவே அந்த கட்டாயமான சட்டம் என்பது பகவான் மிகப் பெரியவர், மேலூம் நாம் கீழ்படிந்தவர்கள் அல்லது பகவானின் வேலைக்காரன். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும்; பகவானின் சட்டம் வலுக்கட்டாயமாக உங்கள் மீது திணிக்கப்படும்." |
750223 - சொற்பொழிவு SB 01.01.02 - கராகஸ் |