TA/750223b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் கராகஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
பிரபுபாதர்: வாழ்க்கையின் பிரதான நான்கு அவலங்களான பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் பிணி - இவற்றை உங்களால் எதிர்கொண்டு தீர்க்க முடியவில்லை என்றால், கடவுள் இல்லை என்று தர்க்கம் செய்ய தகுதி கிடையாது. நீங்கள் விரும்பாவிட்டாலும், இந்த அவல நிலைகளில் உட்படுத்தப்படுகிறீர்கள். எனவே உங்களைக் கட்டுப்படுத்த ஒருவர் இருக்கிறார். இதனை எப்படி தவிர்க்க முடியும்?

வீரபாகு: "பிரிதொரு நாள். பிரிதொரு நாள் இதனை கைக்கொள்வோம்" என்று கூறுகிறார்கள்.

பிரபுபாதர்: பிரிதொரு நாளா?‌ முட்டாள். அதற்குள் காலன் வந்து உங்களை நையப் புடைப்பார். (சிரிப்பு)

ஹிருதயானந்தா: பிரபுபாதா, நாம் இந்த வழியை தேர்ந்தெடுத்தால், சரியான நேரத்தில் வீடு திரும்புவோம்.

பிரபுபாதர்: அதற்குள் என்ன அவசரம்?

ஹிருதயானந்தா: ஜெய !

(இணைப்பு துண்டிப்பு)

பிரபுபாதர்: எல்லாம் வல்ல பரம்பொருளால் அவர்கள் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

வீரபாகு: இந்த கோட்பாட்டில் அவர்களுக்கு பல முரண்பாடுகள் உள்ளது. ஏனென்றால் நானும் அதனைப் படிக்க நேர்ந்தேன்...

பிரபுபாதர்: கிடையவே கிடையாது. முரண்பாடு எங்கே உள்ளது? அனைவரும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். இதில் முரண்பாடு எங்கே?

வீரபாகு: இன்று ஒன்று கூறுகிறார்கள். பிறகு வேறொன்று கூறுகிறார்கள்.

பிரபுபாதர்: அது அயோக்கியத்தனம். மாற்றி மாற்றி பேசுவது அயோக்கியத்தனம். முன்பு ஒருநாள் பேசும் பொழுது ”வாய்ப்பு இருக்கலாம்” என்றார்கள் "ஒருவேளை இருக்கலாம்" என்றார்கள். "உங்களுக்கு உரிய ஞானம் இல்லை. ஆதலால் நீங்கள் பேசக்கூடாது". நீங்கள் ”வாய்ப்பு இருக்கலாம்”, "ஒருவேளை இருக்கலாம்" என்று சரியான புரிதல் இல்லாமல் கூறும்பொழுது, உங்களது அறிவின் மதிப்பு தான் என்ன? ஆகவே பேசாதீர்கள்.

750223 - காலை உலா - கராகஸ்