TA/750224 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கராகஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
ஸ்ரீமத் பாகவதம், வேத விருக்ஷத்தின் கனிந்த கனி மட்டுமல்ல; சுகதேவ கோஸ்வாமியால் ருசிக்கப்பட்டதும் ஆகும். அவர் பகவானை நன்கு உணர்ந்தவர்; பந்தத் தளைகளிலிருந்து விடுபட்டவர். எனவே, அவரிடமிருந்து ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்பது இனிமையை மட்டுமல்லாது, துரிதத்தில் நற்பயனை தரவல்லதும் ஆகும். "சுக முக்காது அம்ருத த்ரவ சம்யுதம்". இதன் காரணம், ஸ்ரீமத் பாகவத‌ விளக்கம் ஏதோ தொழில் முறை விற்பன்னரால் அல்லது மூன்றாந்தர மனிதரால் உரைக்கப்பட்டது அல்ல ; சாட்சாத் சுகதேவ கோஸ்வாமியால் கூறப்பட்டது. இதனைத் தான் சனாதன கோஸ்வாமி அவர்கள், பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களை இறைவனை நன்கு அறிந்து உணர்ந்தவரால் உரைக்கப்பட வேண்டும் என்று அறுதியிட்டுக் கூறுகிறார். மேலும் "அவைஷ்ணவ-முகோத்கிர்ணம் பூதம் ஹரி-கதாம்ருதம், ஷ்ரவணம் நைவ கர்தவ்யம்" (பத்ம புராணம்) என்று சனாதன கோஸ்வாமி கூறுகிறார். "ஹரி-கதாம்ருதம்" என்றால் ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை என்று பொருள். பரம புருஷ பகவானின் லீலைகளைக் கூறும் அமிர்தம் ஆகும் இது. எனவே தான் ஹரி-கதாம்ருதம் என்று இது அழைக்கப்படுகிறது. ஆகவே தான் பகவானை நன்கு அறிந்து உணராத வைஷ்ணவர் அல்லாதவரிடம் இருந்து "ஹரி-கதாம்ருதம்" என்றழைக்கப்படும் ஸ்ரீமத் பாகவதத்தை கேட்கக்கூடாது என்று கூறப்படுகிறது.
750224 - சொற்பொழிவு SB 01.01.03 - கராகஸ்