TA/750225b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மியாமி இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
கோடிகளில் ஒருவருக்கே தன் வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ வேண்டும் என்று ஈடுபாடு இருக்கிறது. யார் ஒருவருக்கும் விருப்பம் இருப்பதில்லை. உண்மையில் அவர்களுக்கு வாழ்க்கையின் உண்மையான வெற்றி என்ன என்பது தெரிவதில்லை. ”எனக்கு நல்ல மனைவி அமைய வேண்டும், உயர்தர வாகனம் மற்றும் அருமையான வாழ்விடம் பெற வேண்டும். இதுவே வெற்றி" என ஒவ்வொருவரும் இந்த நவீன யுக சமுதாயத்தில் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அது வெற்றி அல்ல. அவர்கள் அடைவது தற்காலிகமானது தான். உண்மையான வெற்றி என்பது மாயாதேவியின் கோரப் பிடியருந்து வெளியேற, இந்த பௌதீக கட்டுண்ட வாழ்க்கையின் இன்னல்களான பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் பிணி ஆகியவற்றில் இருந்து தப்பிப்பது தான். நாம் அனைவரும் பல்வேறு தரப்பட்ட பிறப்பினை கடந்து வந்திருக்கிறோம். அதிலும் இந்த மனித பிறப்பு தான் ஜட உடலை தொடர்ச்சியாக பெறும் வாழ்க்கைச் சக்கரத்தில் இருந்து வெளியேற மிக அருமையான சந்தர்ப்பமாகும்.
750225 - சொற்பொழிவு - மியாமி நகர வருகை