"எனவே நம் கிருஷ்ண பக்தி இயக்கம், அதிகாரிகளுக்கு அடிபணிவதைப் பற்றி மக்களுக்கு கற்றுக் கொடுக்கிறது. அதுதான் அறிவுத்திறனுக்கு ஆரம்பம். தத் வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஶ்னேன ஸேவயா (BG 4.34). உங்கள் சிந்தனையின் நோக்கத்திற்கு, உணர்வு மற்றும் விருப்பத்திற்கு அப்பால் இருக்கும் தெய்வீகமான, கருப்பொருளைப் பற்றி கற்றுக் கொள்ள வேண்டுமென்றால்... மன ஊகம் என்றால் சிந்திப்பது, உணர்வு மற்றும் விருப்பம், உளவியல். ஆனால் கருப்பொருள் உங்கள் சிந்தனைக்கு அப்பால்பட்டது. எனவே பகவான் அல்லது பகவானைப் பற்றிய எதுவும் நம் சிந்தனைக்கும், ஊகத்திற்கும் அப்பால்பட்டது. ஆகையினால், நாம் அதை பணிந்து கற்றுக் கொள்ள வேண்டும். தத் வித்தி ப்ரணிபாதேன. ப்ரணிபாத என்றால் சமர்ப்பிப்பு. ப்ரக்ருʼஷ்ட-ரூபேண நிபாத. நிபாத என்றால் சமர்ப்பிப்பு. தத் வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஶ்னேன. முதலில் நீங்கள் முழுமையாக சரணடையக் கூடிய ஒருவரை கண்டுபிடியுங்கள்."
|