"இந்த உடல் பயன்படுத்துவதற்காக எனக்கு பகவாணால் அளிக்கப்பட்டது. எவ்வாறு என்றால் விவசாயி அரசாங்கத்திடமிருந்து கொஞ்சம் நிலத்தை எடுத்துக் கொண்டு, மேலும் அதை உழவு செய்து உணவு மற்றும் தானியங்கள் உற்பத்தி செய்வது போல். ஆனால் அவனுக்கு தெரியும் அதாவது 'நான் இந்த நிலத்தின் ஆக்கிரமிப்பாளராக இருந்தாலும், உண்மையான உரிமையாளர் நில சொந்தக்காரர் தான்'. அதேபோல், நாம் இந்த உண்மையை புரிந்துக் கொண்டால், அதாவது பகவான் எனக்கு இந்த உடலை என் விருப்பப்படி வேலை செய்ய கொடுத்திருக்கிறார், ஆனால் இந்த உடல் என் சொத்து அல்ல; அது பகவானி, கிருஷ்ணரின் சொத்து—இதுதான் அறிவு."
|