"எனவே சைதன்ய மஹாபிரபு மிகவும் கருணைமிக்கவர். பரம கருண, பஹூ துஇ ஜன. இரண்டு பகவான்கள், நிதாஇ-கௌரசந்த்ர, நித்தியானந்த பிரபு மற்றும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, அவர்கள் மிகவும் கருணை மிக்கவர்கள், உங்களுக்கு தெரிகிறதா? அவர்கள் இந்த யுகத்தில் வீழ்ந்த ஆன்மாக்களை மீட்டெடுக்கவே தோன்றினார்கள். எனவே அவர்கள் கிருஷ்ணரைவிட மிகவும் கருணைமிக்கவர்கள். கிருஷ்ணர், அவரும் மிகவும் கருணைமிக்கவர். அவர் முக்தி கொடுக்க வந்தார். ஆனால் கிருஷ்ணர் கோரிக்கையிடுகிறார் அதாவது முதலில் சரணடையுங்கள். சைதன்ய மஹாபிரபு சரணடைய கூட கோரிக்கையிடவில்லை. மிகவும் கருணைமிக்கவர். (குரல் திணறுகிறது) எனவே சைதன்ய மஹாபிரபுவின் அடைக்கலத்தில் எடுத்துக் கொண்டு மற்றும் சந்தோஷமாக இருங்கள்."
|