TA/750228c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் அட்லாண்டா இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
வைராக்கிய வித்யா, எவ்வாறு பட்டற்று விளங்க வேண்டும் என்பதை போதிக்கவே ஸ்ரீ சைதன்ய மகாபிரபு இங்கு அவதரித்தார். இதற்கு உதாரணமாக தனது வாழ்க்கையை அவ்வாறே அவர் வாழ்ந்தும் காட்டினார். நிமாய் பண்டிதர் எனும் பெயரில் நவதீபத்தில் நன்கு கற்றறிந்து, பெரும் செல்வாக்கும் பெற்றவர் அவர். "இங்கு யார் ஒருவரும் ஹரி நாம கீர்த்தனை செய்யக்கூடாது" எனும் அரசாங்க அதிகாரியின் உத்தரவை ஏற்காமல், லட்சம் மக்களை உடனே ஒன்றிணைத்து அந்த அதிகாரியின் இல்லத்தை நோக்கி அவர்களை வழி நடத்தி கீழ்ப்படியாமை இயக்கத்தை நடத்திக் காட்டினார்.
750228 - பரம கருணை விளக்கவுரை - அட்லாண்டா நகர சொற்பொழிவு