TA/750301b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் அட்லாண்டா இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"டாக்டர் ஓல்வ்-ருʼத்கெ: ஸ்ரீலா பிரபுபாதர், நான் நினைக்கிறேன் அவார்கள் உயிரை உருவாக்க முயற்சித்தால், அவர்கள் நுலாசிரியன் பணி எதிர்பார்க்கிறார்கள்.
பிரபுபாதர்: எஹ்? டாக்டர் ஓல்வ்-ருʼத்கெ: உயிரை உருவாக்குவதன் மூலம் அவர்கள் நுலாசிரியன் பணி எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்கள் சொல்ல விரும்புகிறார்கள், "நாங்கள் அதை செய்தோம்," ஆனால் அவர்களுக்கு புரியவில்லை, அவர்கள் செய்ய முடியாது... பிரபுபாதர்: உயிரை உருவாக்குவதன் மூலம் எதை அடைய விரும்புகிறார்கள்? ரூபானுக: நுலாசிரியன் பணி. டாக்டர் ஓல்வ்-ருʼத்கெ: தோற்றுவிப்பவர். அவர்கள் அடைய விருப்புகிறார்கள்... பிரபுபாதர்: தோற்றம் ஏற்கனவே அங்கிருக்கிறது. நீங்கள் எப்படி தோற்றுவிப்பவராக முடியும்? ஏற்கனவே உயிர் அங்கிருக்கிறது. நீங்கள் எப்படி தோற்றுவிப்பவராக முடியும்? அது உங்கள் முட்டாள்தனம். ரூபானுக: அவர்கள் வெறுமனெ கிருஷ்ணரை நிராகரிக்க முயற்சி செய்கிறார்கள். "என்னால் இதை செய்ய முடிந்தால்," அவர் கூறுகிறார்கள், "என்னால் உயிரை உருவாக்க முடிந்தால், பிறகு பகவானை முன்வைக்க வேண்டியதில்லை. நான் பகவான் ஆகலாம்." பிரபுபாதர்: அப்படியென்றால் அசூரர்கள். ரூபானுக: ஆம், அவர்கள் பகவானாக விரும்புகிறார்கள். அவர்களுடைய பார்வை ... பிரபுபாதர்: எனவே நாம் எவ்வாறு அசூரர்களை மதிப்பது? நாம்மால் முடியாது. ரூபானுக: இல்லை. நாம் அவர்களுக்கு எந்த மதிப்பும் கொடுக்கப் போவதில்லை. பிரபுபாதர்: மற்ற முட்டாள்கள், அவர்கள் கொஞ்சம் மரியாதை கொடுக்கலாம், ஆனால் நாம் அதை செய்யப் போவதில்லை."
|
750301 - உரையாடல் B - அட்லாண்டா |