"வாழ்க்கையின் உண்மையான முன்னேற்றம் என்பது பகவான் யார், மேலும் அவருக்கும் எனக்கும் உள்ள உறவுமுறை என்ன மற்றும் அந்த உறவுமுறைக்கு ஏற்ப எவ்வாறு செயல்படுவது என்பதை அறிந்துக் கொள்வதேயாகும். அதுதான் உண்மையான வாழ்க்கை. ஆனால் அவர்களுக்கு அது தெரியாது. ந தே விது꞉ ஸ்வார்த-கதிம்ʼ ஹி விஷ்ணும் (SB 7.5.31). அவர்களுக்கு அது தெரியாது. அவர்கள் நினைக்கிறார்கள், "இந்த யோகா பயிற்சியால், நான் பூரணத்துவம் அடைவேன், என் பௌதிக நிலை மேம்படுத்தப்படும்," மற்றும் பல, பல. அவர்களுக்கு சொந்த கோட்பாடுகள் உள்ளன மேலும்... ஆனால் அது வழ்க்கையின் முன்னேற்றம் அல்ல. அங்கே பல செல்வந்தர்கள், பல கர்மீஸ் இருக்கிறார்கள். யோகா பயிற்சி செய்யாமலே பௌதிக வசதிகளை பெற்று இருக்கிறார்கள். எனவே ஆன்மீக வாழ்க்கை என்றால் பௌதிகத்தில், கட்டுண்ட வாழ்க்கையில் மேம்படுத்தப்பட்டவர்கள் என்று பொருள்படாது. ஆன்மீக வாழ்க்கை என்றால் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைவது. ஆனால் மக்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கிறார்கள் என்றால் ஆதாவது "மதத்தை தழுவுவது என்றால் நம் பௌதிக வாழ்க்கைக்கு உத்வேகம் அளிப்பது." தர்ம அர்த காம மோக்ஷ (SB 4.8.41, CC Ādi 1.90). மேலும் அவர்கள் வெறுப்படைந்ததும், அவர்களுக்கு மோக்ஷ வேண்டும்."
|