"சிரம் விசின்வன்", ஒருவர் கோடிக்கணக்கான ஆண்டுகள் ஊகிக்க முயன்றாலும், புரிந்து கொள்ள முடியாது. "அதாபி தே தேவ பதாம்புஜ வ்தய பிரசாத லேசானுகிரகீத ஏவ ஹி:” இறைவனின் புனிதத் திருப்பாதத்தின் சிறுதுளி கருணையையாவது ஒருவர் பெற்றிருந்தால் தான், உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். அவ்வாறு இன்றி கோடிக்கணக்கான ஆண்டுகள் ஒருவர் ஊகித்துக் கொண்டிருந்தாலும், அவரால் ஏதொன்றையும் புரிந்து கொள்ள முடியாது. ஆன்மீகத் தேடலில் ஊகிப்பு கிஞ்சித்தும் பயனளிக்காது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று ஊகித்த டார்வினுக்கு வேண்டுமானால் அது பயனளிக்கலாம். காரணம் அவர் குரங்கிலிருந்து தான் தோன்றினார். தன்னைப் போலவே பிறரும் அவ்வாறே தோன்றினர் என்று கருதினார். தனது கூற்றுகள் வெறும் ஊகிப்பே என்று டார்வின் ஒத்துக்கொண்டார். அதுபோலவே பிறரும் ஊகிக்கவே செய்கின்றனர். வேதிப்பொருட்களில் இருந்து உயிரை உருவாக்க முயல்கின்றனர். ஆனால் யார் ஒருவரும் உயிரை உருவாக்க இயலாது என்று அவர்களுக்கு தெரியாது. காரணம் உயிர் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டது.
|