விஷயம் என்னவென்றால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவை மிகவும் உன்னதமானது, இத்தகைய சேவையில் நீங்கள் ஏமாற்றினாலும், குற்றவாளி அல்ல. ஆனால் நாம் சராசரி மனிதனுடன் பழக வேண்டியிருப்பதால், ஏமாற்றுவதில் அவர்களின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். மற்றபடி, ஒரு கிருஷ்ண பக்தன், ஒருபோதும் ஏமாற்றுவதில்லை. கிடையவே கிடையாது. அவர் என்ன செயல் புரிந்தாலும்... எவ்வாறு ஒரு தாய் தன் குழந்தையிடம், "என் செல்லக் குழந்தையே, நீ இந்த மருந்தை உட்கொண்டால், நான் உனக்கு இந்த இனிப்பை தருகிறேன்" என்று சொல்வது போல. குழந்தை நோயுற்றுள்ளது; அதனால் அந்த இனிப்பை ஜீரணிக்க முடியாது. இருப்பினும் அந்த தாய் மருந்தை உட்கொள்ளச் செய்ய அந்தக் குழந்தையை ஏமாற்றுகிறாள். அந்தக் குழந்தை மருந்து உட்கொண்ட பின்னும் அந்த இனிப்பை தாய் வழங்குவதில்லை. இதேபோல் தான் நாமும்... சில நேரங்களில் அந்த நபர் மனம் மகிழ சில புகழ்ச்சி வார்த்தைகளைக் கூறலாம். ஆனால் நமது குறிக்கோள் என்ன? அவர் இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும் என்பதே. அதுதான் தந்திரம். ஆனால் அது ஏமாற்று வேலை கிடையாது.
|