TA/750302b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் அட்லாண்டா இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நம் ஶாஸ்த்ர கூறுகிறது அதாவது பிதா ந ஸ ஸ்யாஜ் ஜனனீ ந ஸா ஸ்யாத், ந மோசயேத் ய꞉ ஸமுபேத-ம்ருʼத்யும் (SB 5.5.18). யோசனை என்னவென்றால் தன் பிள்ளையை அழியாதவனாக்க முடியவில்லை என்றால் ஒருவர் தந்தையாக கூடாது, ஒருவர் தாயாக கூடாது. ஏனென்றால் ஆன்மா அழியாதது, ஆனால் அவன் இந்த ஜட உடலில் சிக்கியுள்ளான்; ஆகையினால் இறப்பு நடைபெறுகிறது. உண்மையில் ஆன்மா பிறப்பதில்லை, ந ஜாயதே ந ம்ரியதே வா (BG 2.20). எனவே இந்த செயல்முறை நடந்துக் கொண்டிருக்கிறது, ஆன்மாவின் இடம்பெயர்தல், ஒரு உடலில் இருந்து மற்றொன்றுக்கு, ததா தேஹாந்தர-ப்ராப்தி꞉ (BG 2.13). தந்தையும் தாயும் சிறந்த அறிவாளியாக இருந்து மேலும் மகனுக்கு கல்வி கொடுக்கும் விதத்தில் அதாவது ஜட உடலை ஏற்றுக் கொள்வது இதுதான் கடைசியாக இருக்க வேண்டும் என்று கற்பிக்க வேண்டும். த்யக்த்வா தேஹம்ʼ புனர் ஜன்ம நைதி (BG 4.9), அவன் மீண்டும் இந்த ஜட உடலை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்காது. தந்தையும் தாயும் இதில் தீர்மானமாக இருந்தால், பிறகு அவர்கள் பெற்றோர்களாகலாம்; இல்லையென்றால் கூடாது."
750302 - உரையாடல் B - அட்லாண்டா