"எந்த நண்பர்களும் எந்த வழியும் இல்லாமல் நான் உங்கள் நாட்டிற்கு வந்த போது, ஒன்றும் இல்லாமல் என்றால்... நடைமுறையில், அலைந்து திரிபவர் போல் நான் வந்தேன். ஆனால் எனக்கு முழு நம்பிக்கை இருந்தது அதாவது "என் குரு மஹாராஜ் என்னுடன் இருக்கிறார்." இந்த நம்பிக்கையை நான் இழக்கவில்லை. மேலும் அது நிதர்சனமானது. அங்கே இரண்டு வார்த்தைகள் உள்ளன, வாணீ மற்றும் வபு꞉. வாணீ என்றால் வார்த்தைகள், மேலும் வபு꞉ என்றால் இந்த நேரடியான உடல். எனவே வாணீ வபு꞉வைவிட மிகவும் முக்கியமானது. வபு꞉ முடிவை அடைந்துவிடும். இது ஜட உடல். அது முடிவை அடைந்துவிடும். அதுதான் இயற்கை. ஆனால் நாம் வாணீயை, ஆன்மீக குருவின் வார்த்தைகளை சார்ந்திருந்தால், பிறகு நாம் மிகவும் நிலையாக இருப்போம்."
|