TA/750302e காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் அட்லாண்டா இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
இந்த வாழ்க்கை ஜடப்பொருளை அனுபவிப்பதற்கே அல்லது அனுபவிக்க முயற்சிப்பதற்கே. ஜடப்பொருள் பிரக்ருதி; ஜீவாத்மா புருஷன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே அனைத்திலும் முக்கிய புருஷர். நாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பின்பற்றி அனுபவிக்க முயல்கிறோம் என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. உயிருள்ள பொருளே அனைத்திலும் மேலான பிரக்ருதி. "அபரேயம் இதஸ் து வித்தி மே ப்ரக்ருதி பர:" (பகவத் கீதை 7.5). நமது இந்தப் பிறப்பு ஒரு பிரக்ருதி; ஆனால் புருஷனாக மாற நாம் முயற்சிக்கிறோம். இது நம்மிடையே உள்ள இருப்புக்கான போராட்டம்.
750302 - அட்லாண்டா நகர காலை உலா