"நீங்கள் முழுமை பெற்ற பூரணமானவரை உணர விரும்பினால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட வகை தபஸ்ய செய்ய சம்மதிக்க வேண்டும். இல்லையென்றால் அது சாத்தியமில்லை. பூர்வாங்க சிறிய தபஸ்ய—ஏகாதசி போல்; அதுவும் தபஸ்யாவில் ஒன்று. உண்மையில், ஏகாதசி அன்று நாம் உணவே உட்கொள்ளக் கூடாது, தண்ணீர் கூட. ஆனால் நம் சமூகத்தில் நாம் அதை கண்டிப்பாக பின்பற்றுவதில்ல. நாம் கூறுகிறோம், 'ஏகாதசி, நீங்கள் தானிய வகை உணவுகளை உட்கொள்ளாதீர்கள், கொஞ்சம் பழமும், பாலும் எடுத்துக் கொள்ளுங்கள்'. இதுதான் தபஸ்யா. எனவே இந்த தபஸ்யாவைக் கூட நம்மால் செயல்படுத்த முடியாதா? எனவே இந்த சிறிய எளிதான தபஸ்யாவைக் கூட நாம் செயல்படுத்த தயாராக இல்லை என்றால், பிறகு நாம் எவ்வாறு பரமபதம் அடைய, இறைவனை சென்று அடைய எதிர்பார்க்கலாம்?"
|