TA/750304 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டல்லாஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நான் நடக்க இயலாதவன்." மம மந்த-கதி: "நான் மிகவும் மெதுவாக இருக்கிறேன், அதனால் நான் பகவான் மதன-மோகனனின் தாமரைப் பொற்பாதங்களை தஞ்சம் அடைகிறேன்." இதுவே நமது பகவத் தொண்டு. நமது முதன்மையான மற்றும் ஒரே குறிக்கோள் கிருஷ்ண உணர்வுடன் இருக்க வேண்டும் என்பது தான். கிருஷ்ண உணர்வு இயக்கம் உலகம் முழுவதும் இந்த தத்துவத்தையே போதித்து வருகிறது. நமது இயக்கத்தில் பொருளாதார மேன்மை, பொருளின்ப இச்சைகள் மூலம் திருப்தி அடைதல் என்ற கேள்விகளுக்கு இடமே இல்லை. இதனை மேற்கொள்ள பல பிரச்சார நிறுவனங்கள் உள்ளன. அதனால் நாம் அதைச் செய்ய தேவை இல்லை. எனது நண்பர்கள் சிலர் மருத்துவமனை அல்லது மருந்தகங்களைத் திறக்க வலியுறுத்தினர். ஆனால் அத்தகைய மருத்துவமனைகளில் எனக்கு ஆர்வம் இல்லை என்று நான் வெளிப்படையாகக் கூறினேன். நம்மை உடல் ரீதியாக பாவித்து சேவை செய்ய எத்தனையோ மருத்துவமனைகள் உள்ளன. எனவே அத்தகைய தொண்டுகளில் ஆர்வமுள்ளவர்கள் அங்கு செல்லலாம். இங்கே நாம் நடத்துவது ஆன்மீக மருத்துவமனை; ஆன்மாவிற்கான மருத்துவமனை. மற்ற மருத்துவமனைகளால் மரணத்தை வெல்ல முடியாது. ஆனால் நமது ஆன்மாவிற்கான மருத்துவமனையால் மரணத்தை வெல்ல முடியும்.
750304 - சைதன்ய சரிதாம்ரித ஆதி காண்டம் 01.15 சொற்பொழிவு - டல்லாஸ் நகரம்