TA/750304b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் டல்லாஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உண்மையான நாகரீகம் என்பது வேலையை குறைப்பதாகும். வேலையை குறைத்து, நேரத்தை சேமித்து, மற்றும் உங்கள் ஆன்மீக வாழ்க்கைக்கு திரும்பி செல்வது. அதுதான் நாகரீகம். மேலும் இது நாகரீகமல்ல, வாழ்க்கையின் தேவைகளை பெறுவது, புலன்நுகர்வு, மேலும் பன்றி மற்றும் நாய்களைப் போல் வேலை செய்வது. அது கண்டிக்கப்படுகிறது. நாயம்ʼ தேஹோ தேஹ-பாஜாம்ʼ ந்ருʼலோகே கஷ்டன் காமான் அர்ஹதே விட்-புஜாம்ʼ யே (SB 5.5.1). இந்த மனித வாழ்க்கை நாய்களாலும் பன்றிகளாலும் புலன்நுகர்வுக்காக கடினமாக வேலை செய்வதற்காக ஆனதுபோல் அல்ல. மனித வாழ்க்கை எதற்காக என்றால்: தபோ திவ்யம்ʼ புத்ரகா யேன ஸத்த்வம்ʼ ஶுத்த்யேத் (SB 5.5.1). மனித வாழ்க்கை தபஸ்யவிற்காக ஆனது. ஏன் தபஸ்ய? யேன ஸத்த்வம்ʼ ஶுத்த்யேத்: அவர்களுடை வாழ்க்கை நிலை தூய்மைப்படுத்தபடும். பிறகு நிங்கள் அளவில்லா ஆனந்தம் பெறுவீர்கள்."
750304 - சொற்பொழிவு CC Adi 01.15 - டல்லாஸ்