TA/750305 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நிருபர்: நீங்கள் எந்த வயதில் பகவான் உணர்வு பெற்றீர்கள்?

பிரபுபாதர்: என்னால் உங்களுக்கும் வழங்க முடியும்.

நிருபர்: என்னை மன்னியுங்கள்?

பிரபுபாதர்: நீங்கள் விரும்பினால் என்னால் உங்களுக்கும் வழங்க முடியும்.

நிருபர்: நான் உங்களை கேட்ட கேள்வி யாதெனில், நீங்கள் எந்த வயதில் பகவான் உணர்வு பெற்றீர்கள்?

பிரபுபாதர்: பகவான் உங்களையும் என்னையும் போல் ஒரு நபர். வேறுபாடு யாதெனில் நாமும் நபர்கள். நாம் பல பேர், மேலும் பகவான் ஒருவர், தலைவர்.

நிருபர்: புரிந்தது, சுவாமிஜீ.

பிரபுபாதர்: இப்போது, இந்த ஒருவருக்கும், பலராகிய நமக்கும் உள்ள வேறுபாடு என்ன? அவர் இந்த பலபேரை பராமரிக்கிறார், நாம் அவரால் பராமரிக்கப்படுகிறோம், ஆனால் அவரும் உங்களையும் என்னையும் போல் ஒரு நபர். உங்களுக்கு புரிகிறதா?

நிருபர்: ஆம் எனக்கு புரிகிறது, ஆனால் சுவாமிஜீ, நான் உங்களிடம் கேட்ட கேள்வி அதைவிட இன்னும் சுட்டிக்காட்டப்பட்டது. நீங்கள் தற்சமயம் கொடுத்த பதிலை நான் பாராட்டுகிறேன், ஆனால் எந்த வயதில் உயர்ந்த உண்மையை உணர்ந்தீர்கள்? எந்த வயதில் ...?

பிரபுபாதர்: வயது என்ற கேள்விக்கு இடமில்லை. பகவான் உணர்வு வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து கற்பிக்கப்பட வேண்டும்.

நிருபர்: ஓ, அது எனக்கு புரிகிறது, சுவாமிஜீ. நான் உங்களிடம் கேட்ட கேள்வி, இந்த அவதாரத்தில் எந்த வயதில் உயர்ந்த உண்மையை உணர்ந்தீர்கள்?

பிரபுபாதர்: நிச்சயமாக, நாங்கள் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்தோம். என் தந்தை இவ்வழியில் எனக்கு கற்பித்தார். எனவே நடைமுறையாக என் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து இந்த முறையில் கற்றோம்.

நிருபர்: ஓ, இல்லை, அது எனக்கு புரிகிறது. நான் கேட்பதாவது, எந்த நேரத்தில் சுயமாக உணர்ந்தீர்கள், சுவாமிஜீ? எந்த வயதில்?

பிரபுபாதர்: சரி, அது நான்கு அல்லது ஐந்து வயது என்று சொல்லலாம்."



750305 - Interview - நியூயார்க்