TA/750305b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
அனைத்து நாகரீகமான மனித சமுதாயமும், மதக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறது. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ அல்லது பௌத்த என எந்த மதமாக இருப்பினும், அவைகளுக்கு சில மதக் கோட்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு நாகரீக சமுதாயமும் மதம் இன்றி இல்லை. மதம் இன்றி இருப்பது விலங்கு சமூகம் என்றே பொருள். விலங்குகளுக்கு மதம் இல்லை. பூனைகள் நாய்கள் போன்றவற்றுக்கு எந்த ஒரு தேவாலயமும் இல்லை, அவை எந்த கோவிலும் செல்லத் தேவையில்லை. ஆலயங்கள் மனிதர்களுக்கானது. எனவே தான் "தர்மேண ஹீனா பசுபி: ஸமானா:" என்று சாஸ்திரம் கூறுகிறது. மனித சமுதாயத்தில் மத கலாச்சாரம் இல்லை என்றால், அது விலங்கு சமூகம் தான்; மனித சமூகம் அல்ல.
750305 - சொற்பொழிவு SB 02.02.05 - நியூயார்க் நகரம்