TA/750306 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
வேத சாஸ்திரங்களை புரிந்துகொள்வதற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மீதும் குருவின் மீதும் உறுதியான நம்பிக்கையும் இருக்க வேண்டும். "எனது குரு அதிகம் கற்றவர் அல்லர், எனவே கிருஷ்ணரை நேரடியாகப் சரணடைகிறேன்" என்று முயல்வது பயனற்றது. முற்றிலும் பயனற்றது. சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், "குரு-கிருஷ்ண-கிருபய பாய பக்தி-லதா-பீஜ (CC மத்ய காண்டம் 19.151). பக்தி எனும் கொடியின் விதையை ஒருவர் அடையலாம், எப்படி? குரு-கிருஷ்ண-கிருபா. குருவின் கருணையாலும், கிருஷ்ணரின் கருணையாலும் தான், வெறுமனே கிருஷ்ண-கிருபா மட்டும் அல்ல. முதலில் குரு-கிருபா, பிறகு தான் கிருஷ்ண-கிருபா.
எனவே இந்த (ஸ்ரீரங்க) பிராமணர், சைதன்ய மஹாபிரபுவின் கவனத்தை ஈர்த்தார். அவர் படிப்பறிவில்லாதவர், அவரால் ஒரு வார்த்தை கூட படிக்க முடியவில்லை. இதில் பொதிந்துள்ள உண்மை என்ன? "குரு முக பத்ம வாக்கிய சித்தத கறிய ஐக்கிய". எனது குரு மகாராஜா எனக்குக் கட்டளையிட்டுள்ளார், நான் அதை நிறைவேற்ற வேண்டும். என்னால் படிக்க முடியாது என்று அறிவேன் இருப்பினும் பக்கங்களைத் திறந்து பார்க்கிறேன்" என்றார். தனது குருவின் கட்டளையை அவர் மிகவும் தீவிரமாக மேற்கொண்டார். |
750306 - சொற்பொழிவு SB 01.15.27 - நியூயார்க் நகரம் |