"ஒரு மஞ்சள் காமாலை இருக்கும் ஒருவரிடம், நீங்கள் சிறிது இனிப்பான மிட்டாய் கொடுத்தால், அவனுக்கு அது கசப்பாக சுவைக்கும். அது உண்மையே. ஆனால் அதே மனிதனுக்கு மஞ்சள் காமாலை குணமடைந்ததும், அது மிகவும் இனிப்பாக சுவைக்கும். அதேபோல், பௌதிக கட்டுண்ட வாழ்க்கையில் அங்கே பல ஒழுங்கின்மை இருக்கும், நாம் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முடியாது. நீங்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றால், நீங்கள் ஆன்மிக தளத்திற்கு செல்ல வேண்டும். து꞉காலயம் அஶாஶ்வதம் (BG 8.15). இந்த பௌதிக உலகம் பகவத் கீதையில் து꞉காலயமாக விவரிக்கப்பட்டுள்ளது. இது துன்பம் நிறைந்த இடம். பிறகு நீங்கள் "இல்லை, நான் ஏற்பாடு செய்துவிட்டேன். எனக்கு தற்சமயம் சிறந்த, அழகான வங்கி இருப்பு இருக்கிறது. என் மனைவி நல்லவள், என் பிள்ளைகளும் மிகவும் நல்லவர்கள், எனவே எனக்கு கவலை இல்லை. நான இந்த ஜட உலகிலேயே இருக்கிறேன்," கிருஷ்ணர் கூறுகிறார் அஶாஶ்வதம்: "இல்லை, ஐயா. நிங்கள் இங்கே வாழ முடியாது. நீங்கள் உதைத்து விரட்டப்படுவீர்கள்." து꞉காலயம் அஶாஶ்வதம். நீங்கள் இந்த இடத்தில் இருக்க சம்மதித்தால், இந்த பரிதாபகரமான வாழ்க்கை நிலையில், அதுவும் அனுமதிக்கப்படாது. நிரந்தர தீர்வு இல்லை. ததா தேஹாந்தர-ப்ராப்திர்."
|