TA/750307 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"பிரபுபாதர்: கல்வி என்றால் ஆரம்பத்திலிருந்து இருப்பது. ஒருவேளை ஒரு சிறிய குழந்தை, அவன் கல்வி கற்க விரும்புகிறான், அவன் உடனடியாக எம்.ஏ வகுப்பிற்கு செல்கிறானா? அல்லது அவன் ஏ-பி-சி-டி கற்றுக் கொள்கிறானா? ஆகையினால் உங்களுக்கு இந்த வேலையை கொடுத்தவர்கள், அவர்கள் உணர்ந்த ஆத்மாக்கள் அல்ல. எல்லாம் முட்டாள்களும் போக்கிரிகளும்.
இந்தியப் பெண்: (சிரிக்கிறார்) மிக்க நன்றி. பிரபுபாதர்: ஆம். ஆம். முதலில் நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள், "இரண்டும், இரண்டும் கூட்டினால் நான்காகும்." பிறகு நீங்கள் உயர்ந்த கணிதத்திற்கு செல்வீர்கள். மேலும் திடிர் என்று உயர்ந்த கணிதம்? இது என்ன? அது சிறந்த புத்திசாலித்தனமா? உங்களுக்கு கேள்வி எழும். எப்படியோ, இது என்ன? பக்தர் (1): பகவத் கீதையில் அது "பரமாத்மா," என்று கூறும்போது, அமெரிக்கன் மொழியில் இது உங்கள் அஸ்த்ரல் உடல் என்று பொருள்படுமா? பிரபுபாதர்: அஸ்த்ரல் உடல் என்றால் மனம், அறிவி, தற்பெருமை. இதுதான் அஸ்த்ரல் உடல். மேலும் பரமாத்மா என்றால் ஆன்மா, பரமான்மா." |
750306 - சொற்பொழிவு SB 02.02.06 - நியூயார்க் |