"நீங்கள் மிக நல்ல ஒரு படகில் குடியிருந்தால், இருப்பினும், தளம் நீராக இருப்பதால் படகு எப்பொழுதும் அமைதியாக மேலும் எந்த பிரச்சனை இல்லாமல் இருக்கும் என்று நீங்கள் நினைக்க கூடாது. எனவே பௌதிக உலகம் எப்போதும் பிரச்சனை நிறைந்தது. எனவே நாம் நம்மை தயாராக வைத்துக் கொண்டால்... நம் தயாரான நிலை, தொடர்ந்து ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்தால், பிறகு ஆபத்து கடந்து செல்லும். ஆபத்து, அவையும் நிரந்தரமானதல்ல. அவையும் பருவநிலை மாற்றம் போல் வந்து போகும். சில நேரங்களில் அது வெப்பமாக இருக்கும்; சில நேரங்களில் அது குளிராக இருக்கும். ஆகையால் கிருஷ்ணர் ஆலோசனை கூறுகிறார் அதாவது ஆகமாபாயினோ (அ)நித்யாஸ் தாம்ʼஸ் திதிக்ஷஸ்வ பாரத (BG 2.14). எனவே ஹரே கிருஷ்ணா மஹாமந்திரத்தை உச்சாடனம் செய்வதிலிருந்து திசை திருப்பப்படாதீர்கள், மேலும் அங்கே சில ஆபத்து இருக்கிறது என்று பயப்படாதீர்கள். கிருஷ்ணரின் கமலப் பாதங்களில் தஞ்சம் அடையுங்கள், ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சாடனம் செய்யுங்கள், மற்றும் ஆபத்து கலைந்துவிடும்."
|