TA/750309 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிரபுபாதர்: எனவே பகவானை உண்மையில் குறிக்கும் சில பெயர்கள் உங்களிடம் இருந்தால், அதனால் பரவாயில்லை. ஆனால் ஏதோ ஒன்று, நாயைக் குறிக்கும் பெயராக இருந்தால், பிறகு அது தவறாகும்.

நிருபர்: உங்களை பின்பற்றுபவர்கள் தொடர்ந்து கவனமாக இருக்க கூடிய ஏதோ ஒன்றா?

பிரபுபாதர்: எனவே நாங்கள் கிருஷ்ணரின் பெயரை உச்சாடனம் செய்ய பரிந்துரைக்கிறோம். கிருஷ்ணர் என்றால் அனைத்து கவர்ச்சிகரமானவர்.

நிருபர்: அப்படி என்றால்...?

பிரபுபாதர்: அனைத்து கவர்ச்சிகரமானவர். எனவே பகவான் அனைத்து கவர்ச்சிகரமானவர். இல்லையென்றால் அவர் எவ்வாறு பகவானாக முடியும்? பகவான் உங்களுக்கு கவர்ச்சியாகவும் எனக்கு இல்லாமலும் இருக்க முடியாது. இது மிகவும் துல்லியமான வார்த்தை. பகவானுக்கு பெயர் இல்லை. அது உண்மையானது. ஆனால் அவருடைய பரிவர்த்தனைகளுக்கு ஏற்ப அவருடைய பெயரை மாற்றுகிறோம். எவ்வாறு என்றால் நாம் பகவானை யஶோதா-நந்தன என்று அழைக்கிறோம். எனவே பகவான் யஶோதா மகனாக வந்தார், ஆகையினால் நாம் அவரை யஶோதா-நந்தன என்று அழைக்கிறோம், "யஶோதாவின் மகன்." எனவே நீங்கள் அதை ஒரு பெயராக எடுத்துக் கொள்ளலாம். அதேபோல், பகவானின் பெயரின் மொத்த சுருக்கம்—"அனைத்து கவர்ச்சிகரமானவர்." அதுதான் சரியான பெயர்."

750309 - உரையாடல் - இலண்டன்