TA/750309b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆனந்தம் என்றால் மகிழ்ச்சி, பேரின்பம். அவர் எப்பொழுதும்... கிருஷ்ணா, அவர் இந்த கிரகத்தில் இருந்த போழுது, கோபிகளுடன் எவ்வாறு நடனம் ஆடுவது என்பதை காண்பித்தார். அவர் ஆனந்தம் நிறைந்தவராக இருந்தார். இங்கு நாம் கிருஷ்ணர் வைத்திருக்கிறோம். அவர் ஆனந்த-மூர்தி. அவர் பேரின்பம் இல்லாத நிரானந்தவர், அல்ல. அவர் எப்பொழுதும் தன் துணைவி ஶ்ரீமதீ ராதாராணீயுடன் இருப்பார், மேலும் அவர் புல்லாங்குழல் ஊதிக் கொண்டிருப்பார், ராதாராணீ நடனம் ஆடிக் கொண்டிருப்பார். இதுதான் ஆனந்தம். எனவே நம் ஆனந்தம் எங்கே? நாம் கிருஷ்ணரை பின்பற்றுகிறோம், ஆனால் நம்மால் அனுபவிக்க முடியவில்லை ஏனென்றால் நாம் இந்த ஜட உடலில் இருக்கிறோம். இவ்விதமாக, பகவத் கீதையிலிருந்து, நாம் பகவத் கீதையை நன்றாக படித்தால், பிறகு நாம் பகவான் யார் என்று புரிந்துக் கொள்ளலாம். இல்லையென்றால் நீங்கள் மில்லியன் வருடங்களுக்கு பல பல பிறவியில் யூகம் செய்து கொண்டிருக்கலாம், பகவான் யார் என்பதை உங்களால் புரிந்துக் கொள்ள முடியாது. அங்கே பல சமூகங்கள், இறையியல் சமூகம்கள் இருக்கின்றன, ஆனால் அவர்களுக்கு பகவானைப் பற்றி என்ன தெரியும்? அவர்களுக்கு தெரியாது, அவர்கள் தெரிந்துக் கொள்ளவும் முடியாது. அது சாத்தியமில்லை, ஏனென்றால் அவர்கள் தங்கள் நிறைவற்ற புலன்களுடன் சிந்திக்கிறார்கள்."
750309 - சொற்பொழிவு BG 07.01 - இலண்டன்