TA/750311 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உண்மையான வேலை ப்ரஹ்மன், ஆத்மா, பரமாத்மா, பற்றி விசாரிப்பதாகும், ஆனால் நாம் அதை மறந்துக் கொண்டிருக்கிறோம். நாம் வெறுமனே தற்காலிக வாழ்க்கைக்காக சுறுசுறுப்பாக இருக்கிறோம், அதிகபட்சம் ஐம்பது அல்லது நூறு வருடங்கள். வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்கும் போது, நமக்கு அனுபவம் கிடைக்கிறது—குழந்தையிலிருந்து சிறு குழந்தை, சிறு குழந்தையிலிருந்து சிறுவனாக, சிறுவனிலிருந்து இளமையாக, பிறகு முதுமையான உடல், அடுத்தது என்ன? முதுமை அடைந்த யாரேனும் ஒருவரிடம் கேட்டு பாருங்கள். அவரிடம் கேளுங்க்கள், "ஐயா, நீங்கள் இந்த நிலைக்கு வந்திருக்கிறீர்கள். உங்கள் உடல் இப்போது முதுமை அடந்துள்ளது. நீங்கள் இறக்க வேண்டும். இப்பொழுது, குழந்தையிலிருந்து சிறுவனாக, சிறுவனிலிருந்து இளமையாக, பிறகு நடுத்தர வயது, மேலும் இப்போது நீங்கள் ... இனி அடுத்தது என்ன? உங்களுக்கு தெரியுமா?" ஓ, அவர்கள் மௌனமாக இருப்பார்கள். ஒருவருக்கும் நம் அடுத்த பிறவி என்ன என்பது தெரியாது. ஒரு பிள்ளை சொல்லலாம், "என் அடுத்த வாழ்க்கை ஒரு சிறுவன். நான் ஒரு சிறுவனாவேன்." சிறுவன் கூறலாம், "ஆம், நான் ஒரு அழகான வாலிபனாகலாம்." அந்த வாலிபன் கூறலாம் அதாவது "நான் ஒரு நடுதர வயதானவனாகலாம், என் பிள்ளைகளுக்கு தந்தையாக." மேலும் நடுதர வயதுடையவன் கூறலாம், "ஆம், நான் ஒரு வயதானவனாவேன்." மேலும் நீங்கள் ஒரு வயதானவரை நீங்கள் என்ன ஆவீர்கள் என்று கேளுங்கள்—அவரால் பதில் சொல்ல முடியாது."
750311 - சொற்பொழிவு BG 07.03 - இலண்டன்