பகவத் கைங்கரியத்தில் ஒருவர் புரியும் செயல்கள் அனைத்தும் பக்தியில் மேற்கொள்வதால், இவை ஆன்மீக தளத்தில் அமைந்து இருப்பதால், அனைத்தும் பூரணமானது. நீங்கள் ஹரி கதையைக் கேட்கிறீர்கள், ஆனால் உங்களால் ஹரி நாமத்தை ஜெபிக்க முடியவில்லை என்றாலும், இதன் பலன்கள் ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று குறைவாக இருக்கும் என்பது கிடையாது. அனைத்து வகையான பகவத் கைங்கரியமும் பூரணமே. ஒரு இனிப்பை எந்த பக்கத்தில் இருந்து சுவைத்தாலும் இனிமையை வழங்கும்; எந்த வித்தியாசமும் கிடையாது. அதுபோலவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் முழுமையானவர். நீங்கள் ஹரி கதையைக் கேட்பதில் நிபுணத்துவம் பெற்றால், அது மற்ற எட்டு அல்லது ஒன்பது ஆன்மீக பக்தி செயல்முறைகளில் ஈடுபடுவது போல் நல்லதுதான். சாஸ்திரத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
|