TA/750313 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் தெஹ்ரான் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
வேத கலாச்சாரத்தில் பல துணைக் கடவுள்கள் உள்ளனர், ஆனால் அனைத்திலும் உயர்ந்தவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர், விஷ்ணு. அத்தகைய விஷ்ணுவிற்கு ஆதாரமானவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். ஈஸ்வர பரம கிருஷ்ண சச்சிதானந்த விக்ரஹ: (பிரம்ம சம்ஹிதை 5.1). இதனையே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில், மத்த பரதரம் நன்யத் (பகவத் கீதை 7.7) "என்னை விட மேலான வடிவம் அல்லது மேலான அதிகாரம் வேறு எதுவும் இல்லை" என்று கூறுகிறார். இதனை பிரம்மாவும் உறுதி செய்துள்ளார். ஈஸ்வர பரம கிருஷ்ண: (பிரம்ம சம்ஹிதை 5.1). ஈஸ்வர: என்றால் கட்டுப்படுத்துபவர் என்று பொருள். கட்டுப்படுத்தும் ஆற்றல்களில் பல்வேறு தரநிலைகள் உள்ளன. இவை அனைத்திலும் மிக உயர்ந்த கட்டுப்பாட்டாளர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே.
750313 - தெஹ்ரான் நகர உரையாடல்