பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அனைவராலும் குருவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். நமது முந்தைய ஆசார்யர்கள், சமீபத்திய ஆசாரியர்கள், ராமானுஜாச்சாரியார், மத்வாச்சாரியார் ஆகிய அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். இங்கு நான் விதண்டாவாதிகளைப் பற்றி பேசவில்லை. அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆசார்யர்கள், சங்கராச்சாரியார் போன்றோர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை உயர்ந்த குருவாக ஏற்றுக்கொண்டனர். சைதன்ய மஹாபிரபு. ஆகவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை உயர்ந்த குருவாக ஏற்றுக் கொண்டு, அவருடைய அறிவுரைகளைப் பின்பற்றி, மற்றவர்களை நம்ப வைக்க முயற்சி செய்யுங்கள். "மற்றவர்கள்" என நான் இங்கு குறிப்பிடுவது உங்கள் குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் கூட. இதுவே வாழ்க்கையின் வெற்றி ஆகும். சம்சுத்தி ஹரி தோஷணம். நீங்கள் ஏன் உங்கள் வாழ்க்கையை கண்மூடித்தனமாக வாழ வேண்டும்? இந்த மனித வாழ்க்கை மிக உயர்ந்த ஞானம் கொண்டது. பகவத் கீதையின் போதனைகளைப் புரிந்துகொண்டு அதை உங்களால் முடிந்தவரை பிறருக்கு வழங்கி ஆன்மீக பரப்புரையாற்றுவதே மிகவும் உன்னதமான ஞானம். அது இயலவில்லை என்றால், உங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே கூட நீங்கள் பகவத் பிரசங்கம் செய்யலாம். இதுவே வாழ்க்கையின் பூரணத்துவம் ஆகும்.
|