TA/750313c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் தெஹ்ரான் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
நமக்குத் தேவையான அனைத்து பொருளாதார வளர்ச்சியும் இயல்பான மழைப்பொழிவால் நிறைவேற்றப்படும். "காமம் வவர்ச பர்ஜன்ய:". ”காமம்" என்பது வாழ்க்கையின் அனைத்து தேவைகளையும் குறிக்கிறது. இன்றைய நவீன யுக மக்கள், விஞ்ஞானிகள், தத்துவவாதிகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு இது தெரிவதில்லை. "காமம்". ”காமம்” என்றால் வாழ்க்கையின் தேவைகள். நமக்கு பல வளங்கள் இயற்கையில் கிடைத்துள்ளன. ஆனால் இந்த வளங்களை நமக்கு தந்தவர் யார்? இங்கு இது தெளிவாகக் கூறப்படுகிறது. ”காமம் வவர்ச பர்ஜன்ய:”. பர்ஜன்ய (மழை) எவ்வாறு எதன் காரணமாக இயல்பாக பொழிகிறது? "யஞாத் பவதி பர்ஜன்ய:" (பகவத் கீதை 3.14). அத்தகைய மழை பொழிவிற்கு திட்டம் எங்கே, யாரால் வகுக்கப்படுகிறது? யஞ்னாத் (யஞ்னம்) என்பது என்ன? இந்த கலியுகத்தில் பிற யஞ்னங்கள் செய்வது மிகவும் கடினம். யஞ்னம் புரிய போதிய செல்வ வளம் இப்போது இல்லை. தகுதிவாய்ந்த பிராமணர்கள் இல்லை. இந்த நிலையில் எவ்வாறு யஞ்னத்தை பூரணமாக செய்ய முடியும்? எனவே இங்கு யஞ்னம், "யஞை சங்கீர்தன-பிராயைர் யஜந்தி ஹி சுமேதசா" (ஸ்ரீமத் பாகவதம் 11.5.32) ஆகும். "யஞை" புத்தி கூர்மை உள்ளவர்கள் இத்தகைய யஞ்னத்தை முன்னெடுப்பார்கள்; மந்தமானவர்கள் அல்லர். ஆகவே அனைவரும் இந்த ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை வீட்டிற்கு வீடு பிரச்சாரம் செய்யுங்கள். மக்கள் எத்தகைய அறிவினை தற்போது பெற்றிருந்தாலும் பரவாயில்லை. இறைவனின் புனிதத் திருநாமத்தை பரப்பத் தொடங்குங்கள். இத்தகைய யஞ்னத்தால் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகிறது என்று நீங்களே காண்பீர்கள்.
750313 - ஸ்ரீமத் பாகவதம் 01.10.03-04 - தெஹ்ரான் நகர சொற்பொழிவு