TA/750315 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் தெஹ்ரான் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எல்லோரும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள், "இப்போது நான் திருமணம் ஆனவன், என் நிலை பாதுகாப்பாக இருக்கிறது. என்னிடம் இவ்வளவு பணம் இருக்கிறது. எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். எனக்கு நிறைய செல்வாக்கு இருக்கிறது. எனக்கு நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள், நல்ல வங்கி இருப்பு, நல்ல பதவி இருக்கிறது. நான் ஏன் ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்ய செல்ல வேண்டும்? நான் பாதுகாப்பாக இருக்கிறேன்." இதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. அனைவரும் தான் குறைவற்று இருப்பாதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அறியாமை. "நான் அனைத்து சட்டங்களையும் மீறலாம். நான், விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறலாம். யாரை பற்றியும் அக்கறை இல்லை." ஆகையினால், அவர்கள் மூடர்கள் என்று விவரிக்கப்படுகிறார்கள். ந மாம்ʼ துஷ்க்ருʼதினோ மூடா꞉."
750315 - உரையாடல் - தெஹ்ரான்