TA/750320 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கல்கத்தா இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஶ்ரீமத் பாகவதம் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் பெயரிடவில்லை. ஶ்ரீமத் பாகவதம் கூறுவதாவது, " அந்த மதம், அந்த மத அமைப்பு, முதல் தரமாகவுள்ளது." ச வை பும்சாம் பரோ தர்மஹ், "ஆழ்நிலை". இந்த ஹிந்து மதம், முஸ்லிம் மதம், கிருஸ்துவ மதம், அவையெல்லாம் ப்ராக்ருத, சாதாரணமானது. ஆனால் நாம் "நாங்கள் ஹிந்துக்கள்", "நாங்கள் முஸ்லிம்கள்", "நாங்கள் கிரிஸ்துவர்கள்" என்கிற ப்ராக்ருத அல்லது சாதாரணமான மதத்தின் கருத்துருக்களை கடந்து ஆழ்நிலைக்குச் செல்ல வேண்டும். ஒரு தங்கத்தை போல. தங்கம் தங்கம் தான். தங்கமானது ஹிந்துவின் தங்கமாகவோ அல்லது கிருஸ்தவர்கள்களின் தங்கமாகவோ அல்லது முகமதியர்களின் தங்கமாகவோ இருக்க முடியாது. ஒருவருமில்லை... ஏனென்றால் ஒரு தங்க கட்டியானது ஹிந்துவின் கைகளில் இருந்தாலும் முஸ்லிமின் கைகளில் இருந்தாலும் எவரும் "இது முஸ்லிம் தங்கம்", "இது ஹிந்து தங்கம்" என்று கூற மாட்டார்கள். அனைவரும் "இது தங்கம்" என்று தான் கூறுவார்கள். ஆதலால் நாம் தங்கத்தை தான் தேர்ந்தெடுக்க வேண்டும்- ஹிந்து தங்கத்தையோ அல்லது முஸ்லிம் தங்கத்தையோ அல்லது கிருஸ்துவ தங்கத்தையோ அல்ல".
750320 - சொற்பொழிவு Arrival - கல்கத்தா