"கிருஷ்ணர் தெய்வீகமானவர். எனவே அவர் சொல்வது எதுவாக இருந்தாலும், அதைச் செய்வது என் கடமையாகும், என் தளத்தில் அவரை நியாயந்தீர்க்க கூடாது."அது கிருஷ்ணரின் கருணை. தான் இருக்கும் தளத்தில் இருப்பது போல் கிருஷ்ணரை ஏற்றுக் கொள்லாமல், ஆனால் கிருஷ்ணரின் ஆளுமையை ஏற்றுக் கொள்பவர், அவரால் புரிந்துக் கொள்ள முடியும். இல்லையென்றால், ஒரு நபர் பல மில்லியன் கணக்கில் இது போல் பிரபஞ்சங்களை விரிவாக்கம் செய்திருக்கிறார் என்று அவர் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்? ஊடனடியாக அவர்கள் கட்டுக்கதையாக எடுத்துக் கொள்வார்கள், ஏனென்றால் அவர் தன்னுடைய திறன் விதிமுறைகள்படி நினைத்துக் கொள்கிறார், கிருஷ்ணர் கூறுவது போல் அல்ல. ஆகையினால் ஒருவராலும் கிருஷ்ணரை புரிந்துக் கொள்ள முடியாது. நாம் எளிய முறையை எடுத்துக் கொண்டோம், கிருஷ்ணரை அவர் கூறுவது போல் ஏற்றுக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். முடிந்துவிட்டது. அதுதான் முதன்மையான வேலை. எங்கள் தத்துவம் எளிமையானது, ஏனென்றால் நாங்கள் கிருஷ்ணரின் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம், அவ்வளவுதான்."
|