TA/750325 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"க்ருʼஷ்ண-சைதன்ய-ஸஞ்ஜ்ஞகம். கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு, அவர் தானே ஒரு குரூன்னாக விரிவாக்கம் செய்தார். ஒரு குரு, ஆன்மீக குருவும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு. ஸாக்ஷாத்-தரித்வேன ஸமஸ்த-ஶாஸ்த்ரைர் உக்த꞉. அனைத்து ஶாஸ்த்ரஸ்திலும், குரு கிருஷ்ணராக் ஏற்றுக் கொள்ளப்படுகிறார். ஸாக்ஷாத்-தரித்வேன. ஸாக்ஷாத் என்றால் நேரடியாக. எவ்வாறு என்றால், நீங்கள் பக்தி, மரியாதை, இவற்றை உங்கள் குருவிற்க்கு அளிப்பது போல். எனவே அந்த மரியாதை கிருஷ்ணருக்கு அளிக்கப்படுகிறது. குருவும் தன்னை கிருஷ்ணர் என்று நினைத்துக் கொள்வதில்லை, ஆனால் அவர் சீடர்களின் பக்தி தொண்டை கிருஷ்ணருக்கு சமர்ப்பிக்க சேகரிக்கிறார். இதுதான் முறை. நாம் கிருஷ்ணரை நேரடியாக அணுக முடியாது. நாம் குருவின் மூலம் அணுக வேண்டும். தஸ்மாத் குரும்ʼ ப்ரபத்யேத ஜிஜ்ஞாஸு꞉ ஶ்ரேய உத்தமம் (SB 11.3.21). அதுதான் ஶாஸ்த்ராவின் தடை உத்தரவு, அதாவது ஒருவர் பக்தி தொண்டை சீடரிடமிருந்து பூரணமானவருக்கு பரிமாற்றம் செய்யக் கூடிய குருவை அணுக வேண்டும்."
750325 - சொற்பொழிவு CC Adi 01.01 - மாயாப்பூர்