TA/750327 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
பிரபுபாதர்: குற்றமற்ற வகையில் புனிதத் திருநாமம் கூற வேண்டும்; அதுவே தூய்மைப்படுத்தும். இது சைதன்ய மஹாபிரபுவால் நமக்கு வழங்கப்பட்ட எளிதான செயல்முறையாகும். அவர் முதலில் நமது இதயத்தை சுத்தப்படுத்த பரிந்துரைக்கிறார். உங்கள் இதயம் சுத்தப்படுத்தப்பட்டவுடன், நீங்கள் உடன் தூய்மையாக விளங்குகிறீர்கள். இதுதான் வழி. எனவே எப்பொழுதும் புனிதத் திருநாம மகா மந்திரம் கூறுதல் அல்லது சாஸ்திரத்தை வாசிப்பது அல்லது பகவத் பிரசங்கம் செய்வதில் ஈடுபடுங்கள். அப்போது தெளிவு பிறக்கும்.
ரூபானுகா: உண்மையில் இது மிகவும் எளிதான செயலாகும் ஆகும். பிரபுபாதர்: ஆம். இது எளிதான செயலாகும். இறைவனின் புனிதத் திருநாமத்தைக் கூறுவது ஒன்றும் இரண்டாம் நிலை செயல்முறை இல்லை. இது சைதன்ய மஹாபிரபுவால் பரிந்துரைக்கப்பட்டது; நமக்கு வழங்கப்பட்ட அருட்கொடை. பரம் விஜயதே ஸ்ரீ-கிருஷ்ண-சங்கீர்த்தநம். |
750327 - ஆளும் குழு ஆணையத்துடனான உரையாடல் - ஸ்ரீ மாயாபூர் |