"கிருஷ்ணருடன் நம் உண்மையான உறவை நாம் மறந்துவிட்டோம், மேலும் பௌதிக முறையில் சரிசெய்து நாம் மகிழ்ச்சி அடைய முயற்சி செய்கிறோம். இதுதான் நாவீன நாகரீகம். ஒருவர் நினைத்துக் கொண்டிருக்கிறார், "எனக்கு அழகான வீடு, அழகான வாகனம், நல்ல தொழில், நல்ல வங்கி இருப்பு, அழகான மனைவி, அழகான பிள்ளைகள் கிடைத்தால்..." இதுதான் பௌதிக நாகரீகம். ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை. இந்த அழகான விஷயங்கள் அனைத்தையும் மீறி, அவன் மகிழ்ச்சி அடையவேமாட்டான். இப்போது நீங்கள், ஐரோப்பியர் மற்றும் அமெரிக்கர், சிறந்த தகுதிகள் பெற்றிருக்கிறீர்கள். நான் பல முறை விவரித்திருக்கிறேன் அதாவது இனிமேலும் உங்களுக்கு இந்த "அழகான" விஷயங்கள், அழகான விஷயங்கள் என்று அழைக்கப்படும் காரியங்களில் அதிகம் நாட்டம் இல்லை. உண்மையான நல்ல விஷயம் ஆன்மீகத்தை புரிந்துக் கொள்வது. அந்த நல்ல விஷயத்தின் ஆரம்பம், அஹம்ʼ ப்ரஹ்மாஸ்மி: "நான் இந்த உடல் அல்ல." அதுதான் பகவத் கீதையின் ஆரம்பம். கிருஷ்ணர் அர்ஜுனருக்கு அறிவுறுத்துகிறார் அதாவது "நீ இந்த உடல் அல்ல. நீ ஆன்மீக ஆத்மா." புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்."
|