நீங்கள் உங்கள் ஆன்மீக குருவை முந்தி மேலேறிச் செல்ல நினைக்காதீர்கள். பரம்பரை அமைப்பின் வழியைப் பின்பற்ற வேண்டும். உங்கள் ஆன்மீக குரு மூலமாக கோஸ்வாமிகளை அணுக வேண்டும். அவர்கள் மூலம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை அணுகி, அவர் மூலம் நீங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அணுக வேண்டும். இதுதான் சரியான வழி. எனவே நரோத்தம தாச தாகூரா, "எ சாய் கோசாய் ஜார்-தார் முய் தாஸ்" என்று கூறினார். நாம் அடியாருக்கு அடியார். இதனையே ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் "கோபி பர்த்து பத கமலையோர் தாச-தாசானுதாச" (சைதன்ய சரிதாம்ரித மத்திய லீலா 13.80) என்று அறிவுறுத்துகிறார். நீங்கள் எவ்வளவு அதிகமாக அடியாருக்கு அடியாராக செயல்படுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் பரிபூரணமாக விளங்குகிறீர்கள். அதுவே நீங்கள் திடீரென்று தலைவராக விரும்பினால், நரகத்திற்குச் செல்கிறீர்கள் என்று பொருள். இது உறுதி. எனவே அவ்வாறு செயல்பட முயலாதீர்கள். இது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் போதனை. நீங்கள் அடியாருக்கு அடியாராக, அவர்கள் வழியைப் பின்பற்றினால் முன்னேறுகிறீர்கள். அவ்வாறு இல்லாமல், நான் இப்போது தலைவராகி விட்டேன் என்று நினைத்தால், நரகத்திற்கு செல்கிறீர்கள்.
|