"எனவே மக்கள் மகிழ்ச்சியை தேடி ஏங்குகிறார்கள், ஏனென்றால் அவன் ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹத்தின், கிருஷ்ணரின், அங்க உறுப்பு. எனவே இயற்கையாக, நாம் அதே ஆன்மீக மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் நாம் மாயாவால் தவறாக வழிநடத்தப்படுகிறோம். அதில் நாம் சரியான ஆன்மீக குருவின் வழிகாட்டுதலில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று காலை நாம் இந்த பதிப்பை விவாதித்துக் கொண்டிருந்தோம் சைதன்ய-சரிதாம்ருʼத, ராதா க்ருʼஷ்ண-ப்ரணய-விக்ருʼதிர் அஹ்லதினி-ஶக்திர் அஸ்மத் (CC Adi 1.5). இந்த ராதா க்ருʼஷ்ண-ப்ரணய-விக்ருʼதிர், ராதா மற்றும் கிருஷ்ணாவிற்கு இடையில் இருக்கும் காதல் விவகாரங்கள், மேலும் கோபிகளும் ஸ்ரீமதி ராதாராணியின் விரிவாக்கம் ஆகும். அதுதான் ஆனந்த-சின்மய-ரஸ. அது பௌதிக விஷயங்கள் அல்ல. அது கிருஷ்ணரின் மகிழ்ச்சி மிக்க ஆற்றலின் மாற்றமாகும். ராதா க்ருʼஷ்ண-ப்ரணய-விக்ருʼதிர் அஹ்லாதினீ-ஶக்திர் அஸ்மாத்."
|