TA/750330 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் குடும்பத்தில் ஒரு அங்கமாக இங்கு நாம் நம்மைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம். எனவே இவ்வுலகக் குடும்பத்தைப் பராமரிப்பதில் நாம் ஏன் மிகவும் கவலைப்பட வேண்டும்? ஆகவே தான் சைதன்ய மகாபிரபு: "நான் சன்யாசி அல்ல. நான் சன்யாசி அல்ல. நான் கிருஹஸ்தர் அல்ல. நான் பிரம்மச்சாரியும் அல்ல" என்று கூறுகிறார். இந்த நான்கு... எட்டு வர்ணாஸ்ரம தர்மம் ஆன்மீகத்திற்குத் தேவையற்றது. எனவே சைதன்ய மகாபிரபு, ராமானந்த ராயுடன் உரையாற்றும் பொழுது - இதனை நீங்கள் "ஸ்ரீ சைதன்யரின் போதனைகள்" எனும் நூலில் காணலாம்... ராமானந்த ராய் வர்ணாஸ்ரம தர்மத்தைப் பரிந்துரைத்தவுடன், ஸ்ரீ சைதன்யர்... "இது மிகவும் முக்கியம் அல்ல. இதனைக் காட்டிலும் உத்தமமானது பற்றி தொடருங்கள்" என்றார். அவர் இந்த வர்ணாஸ்ரம தர்மத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் நெறிமுறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கைக்கு, வர்ணாஸ்ர தர்மம் அவசியம். உயர்ந்த நிலைக்கு அது தேவையில்லை. எனவே தான் சாதாரண நபருக்கு இது பரிந்துரைக்கப்படவில்லை. ஆகவே இதுவும் தேவையற்றது.
750330 - மாயாபூர் பொதுக்குழு மன்ற உரையாடல்