முதலில், இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். "இறப்பு என் வாழ்வின் முடிவு அல்ல. நான் நித்தியமானவன். நான் என் உடலை மாற்றிக் கொண்டிருக்கிறேன்" என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே தான் இந்த உடல் ஒரு ஆடையாக வர்ணிக்கப்படுகிறது. இப்போது நீங்கள் ஒரு அரசனைப் போல உடையணிந்திருக்கலாம். அடுத்த பிறவியில் உடை வித்தியாசமாக இருக்கலாம். "இருக்கலாம்" என்றால் அது நிச்சயமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். இதேபோல் பலதரப்பட்ட உயிரினங்களை இவ்வகையான பிறப்பின் போது வழங்கப்படும் உடைக்கு உதாரணமாக கூறலாம். "அடுத்து நான் என்ன வகையான உடையை அணியப் போகிறேன்?" என்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் கற்கும் படிப்பில் இத்தகைய விஞ்ஞானம் எங்கே? இவ்வகையான ஞானத்தை போதிக்கும் பள்ளி, கல்லூரி எங்கே? "நான் இந்த உடையுடன் நிரந்தரமாக இருப்பேன்" என்று நீங்கள் உறுதியாக இருந்தால், அது உண்மை இல்லை. நீங்கள் உங்கள் உடையை மாற்றித் தான் ஆகவேண்டும் என்பது திண்ணம். ததா தேஹாந்தர-ப்ராப்தி: (பகவத் கீதை 2.13).
|