TA/750330c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய ராதா கிருஷ்ண நஹே அன்ய" என்று சொல்லப்படுகிறது. நீங்கள் ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மகாபிரபுவை வழிபட்டாலே ராதையையும் கிருஷ்ணனையும் வழிபட்டதாக அர்த்தம். இதுவே இந்த ஸ்லோகத்தின் அர்த்தம்.
சைதன்ய சரிதாம்ருதத்தின் ஆசிரியர் கிருஷ்ணதாச கவிராஜ கோஸ்வாமி, ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் அவதாரத்திற்கான காரணத்தைக் கூறுகிறார். ஒரு சமயம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ராதாராணியின் விசேச மேன்மை என்ன என்று தெரிந்து கொள்ள விரும்பினார். கிருஷ்ணரின் மற்றொரு பெயர் மதன-மோகனன்; கவர்ச்சிகரமானவர் என்று பொருள். கிருஷ்ணர் எல்லோரையும் கவரும் தன்மை கொண்டவர்; மதனன் இந்த உலகத்தில் கவர்ச்சிகரமானவன், அத்தகைய காமனையும் (மதனன்) கவரும் அளவுக்கு கிருஷ்ணர் கவர்ச்சிகரமானவர். மேலும் இவர் மதன-மோகனன். ராதாராணி மதன-மோகன-மோகினி, அதாவது அவர் மதன-மோகனனையே கவரும் சக்தி கொண்டவர். எனவே தான் கிருஷ்ணர், "ராதாராணி என்னைக் கவருகிறாள். அவளிடம் உள்ள விசேச தன்மை தான் என்ன? நான் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் கவருகிறேன், இருப்பினும் அவள் என்னைக் கவருகிறாள்". இதன் சூட்சுமத்தை புரிந்து கொள்ள பகவான் முயற்சிக்கிறார். |
750330 - சைதன்ய சரிதாம்ரிதம். ஆதி லீலை 01.06 - மாயாபூர் சொற்பொழிவு |