பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பக்த்யா மாம் அபிஜானாதி (BG 18.55) என்று கூறுகிறார். கிருஷ்ணரை அறிய விரும்பினால், கர்மா, (அஷ்டாங்க) யோகா, ஞானம் போன்றவை உங்களை ஓரளவுக்கு உயர்த்தினாலும், கர்மா, ஞானம் மற்றும் யோகா மூலம் பரம புருஷோத்தமனை அடைய முடியாது. கிருஷ்ணரை அவர் இருக்கும் நிலையிலேயே அறிய விரும்பினால், நீங்கள் பக்தி-யோகத்தின் பாதையை ஏற்க வேண்டும். கிருஷ்ணர் தனிப்பட்ட முறையில் கூறுகிறார், "பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யாஸ் சாஸ்மி தத்வத:". மேலும் பக்தி-யோகத்தின் இத்தகைய பூரணத்துவத்தை அடைய, உங்களுக்கு பலராமர், சங்கர்ஷணரின் பலம் தேவை.
|