TA/750331b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"அச்யுதானந்த: ராமானுஜ மற்றும் மத்வ, க்ருʼஷ்ண-வர்ணம் என்றால் "கருப்பு" என்று அர்த்தம் என்று கூறுகிறார்கள். க்ருʼஷ்ண-வர்ணம்ʼ த்விஷ க்ருʼஷ்ணம் (SB 11.5.32): "ஆனால் அவர் ஒளியாவார்."
பிரபுபாதர்: ஹம்ம்? இல்லை நாம் நம் ஆசார்யர்களை பின்பற்ற வேண்டும். ஏன்... அச்யுதானந்த: இல்லை, ஆனால் அவர்களை எவ்வாறு சமாதானப்படுத்துவது? அவர்கள் சைதன்யரை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பிரபுபாதர்: இல்லை. "நீயும் ஒரு ஆசார்ய தான், ஆனால் நமக்கு நம் சொந்த ஆசார்ய இருக்கிறார். நான் ஏன் உன்னை பின்பற்ற வேண்டும்?" அச்யுதானந்த: ஆனால் அவர்களை எவ்வாறு சமாதானப்படுத்துவது? பிரபுபாதர்: சமாதானப்படுத்துவது என்றால் அவர்கள் சமாதானம் அடையமாட்டார்கள். க்ருʼஷ்ண-வர்ணம், க்ருʼஷ்ணம்ʼ வர்ணயதி. கிருஷ்ணரை விவரிக்கும் ஒருவர், அது க்ருʼஷ்ண-வர்ண. மேலும் க்ருʼஷ்ண-வர்ண என்றால் கருப்பு என்று பொருள்படாது. மேலும் அது மீண்டும் உறுதி செய்யப்படுகிறது, த்விஷா அக்ருʼஷ்ணம். எனவே அவர்கள் எவ்வாறு "கருப்பு" என்று கூறலாம்? நிறத்தில், அவர் அக்ருʼஷ்ண. எனவே அவர்கள் எவ்வாறு "கருப்பு" என்று விளக்கம் கொடுக்கலாம்? Acyutānanda: அது அவருடைய ஒளி. பிரபுபாதர்: அது அவருடைய விளக்கம். த்விஷா, த்விஷா அக்ருʼஷ்ணம். மேலும் ஸ்ரீமத் பாகவதத்தில் அது கூறப்பட்டுள்ளது, இதானீம்ʼ க்ருʼஷ்ணதாம்ʼ கத꞉, ஶுக்லோ ரக்தஸ் ததா பித꞉ இதானீம்ʼ க்ருʼஷ்ணதாம்ʼ கத꞉ (SB 10.8.13). எனவே பகவானுக்கு மற்ற நிறங்களும் இருக்கின்றன: வெள்ளையும் சிகப்பும் மஞ்சளும். எனவே இங்கே இருப்பது மஞ்சள். த்விஷா அக்ருʼஷ்ண. எனவே நாம் ஜீவ கோஸ்வாமியை பின்பற்ற வேண்டும். நாம் ஏன் இந்த போக்கிரிகளை பின்பற்ற வேண்டும்? நாம் பின்பற்றக் கூடாது."
|
750331 - உரையாடல் - மாயாப்பூர் |