TA/750401 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் வாக்குவாதம் செய்யும் போது அதாவது... நாம் பகவான் மீது விசுவாசம் உள்ளவர்களாக கருதப்படுகிறோம். நாம் நம்பிக்கையற்றவர்கள் அல்ல. நாம் வெறுமனே யார் அந்த பகவான் என்ற உறுதி பெற விரும்புகிறோம். நாம் நம்பிக்கையற்றவர்கள் அல்ல. பிறகு பகவான் மீது நம்பிக்கை உள்ளவர்கள் சிலர், பகவான் யார் என்ற உறுதி பெற ஒன்று கூடுகிறார்கள். எவ்வாறு என்றால் நாம் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க சந்திக்க கூடுவது போல், எனவே அவர்கள் நம்பிக்கையற்றவர்கள் அல்ல. அவர்கள் நம்பிக்கையற்றவர்கள் அல்ல. அங்கே பல ஆளுமைகள் இருப்பதால், ஜனாதிபதிக்கான வேட்பாளர்கள், இப்போது ஜனாதிபதிக்கான சரியான நபர் யார்? அதுதான் தேவைப்படுகிறது. நம்பிக்கையற்றவர்களுக்கு, அவருக்கு அணுகல் இல்லை. பகவானைப் பற்றிய விவாதத்தில் அவனுக்கு அணுகல் இல்லை. நாம் பகவானைப் பற்றி விவாதிக்கும் பொழுது, அவர்கள் அனைவரும் நம்பிக்கை உள்ளவர்களாக கருதப்படுகிறது. எனவே நீங்கள் சொன்னால்... நாம் உறுதி கொள்ள ஒரு கூட்டம் நடத்துகிறோம்... பகவானின் பல பெயர்கள் உள்ளன. இப்பொழுது உண்மையான பகவான் யார் என்று நாம் உறுதி கொள்கிறோம். "பகாவான்" என்றால் அவருக்கு மேல் எதுவும் இல்லை. மத்த꞉ பரதரம்ʼ நான்யத் (BG 7.7). அதுதான் பகவான்."
750401 - உரையாடல் - மாயாப்பூர்