TA/750401b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"தேஹாபத்ய-கலத்ராதிஷு. இந்த உடல், தேஹ; அபத்ய, குழந்தைகள்; கலத்ர, மனைவி; ஆதிஷு, இந்த அனைத்து பொருள்களும் வைத்து... பிறகு மீண்டும் தொடரவும். குழந்தையிலிருந்து, நீங்கள் அடைவது... அவர்களுக்கு திருமணம் செய்யுங்கள். பிறகு மீண்டும் நீட்டிப்பு தொடரும்—மருமகள், மருமகன், பேரன். இவ்வழியாக, நாம் சந்தோஷம் என்று நினைப்பதை அதிகரித்துக் கொண்டிருக்கிறோம். ஆத்ம-ஸைன்யேஷு. மேலூம் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் அதாவது "இந்த சுற்றியுள்ள நண்பர்கள்—சமூகம், நண்பர்கள் மேலும் அன்பு, நாடு—என்னை பாதுகாக்கும்." எங்கள் நாட்டில், நாங்கள் பார்த்திருக்கிறோம், காந்தி போராடினார் எனவே, அதாவது, சுதந்திரம் பெறுவது மிகவும் கடினமாக இருந்தது, சுதந்திரம் கிடைத்தால் "நாம் சந்தோஷமாக இருப்போம்." என்று நினைத்தார். ஆனால் காந்தியும் கொல்லப்பட்டார்.
எனவே இதைத்தான் மாயா என்று அழைக்கிறோம். நீங்கள் மாயா என்பதை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். மாயா என்றால் மகிழ்ச்சி இல்லாத இடம், உண்மை இல்லை, இருப்பினும், நாம் அதற்காக போராடுகிறோம். இதைத்தான் மாயா என்று அழைக்கிறோம்." |
750401 - சொற்பொழிவு CC Adi 01.08 - மாயாப்பூர் |