TA/750401c காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
பிரபுபாதர்: இது மிகவும் எளிய உண்மை. நான் இந்த உடல். நான் மகிழ்ச்சியைத் தேடுகிறேன். அப்படியானால் நான் ஏன் மகிழ்ச்சியைத் தேடுகிறேன்? ஒருவர் இந்த விஷயத்தைப் பற்றி வெளிப்படையாக விவாதித்தால், அவர் நியாயமானவன் என்பதை நாம் கண்டுகொள்ளலாம். நான் ஏன் மகிழ்ச்சியைத் தேடுகிறேன்? இதற்கு என்ன பதில்? அது ஒரு உண்மை. எல்லோரும் மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். நாம் ஏன் மகிழ்ச்சியைத் தேடுகிறோம்? என்ன பதில்?
பஞ்சத்ரவிட: ஏனென்றால் எல்லோரும் துன்பத்தில் இருக்கிறார்கள், அவர்கள் அதை விரும்புவதில்லை. பிரபுபாதர்: இது ஒரு எதிர்மறை விளக்கம். கீர்த்தனானந்த: காரணம் ஏனென்றால் இயல்பாகவே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பிரபுபாதர்: ஆம். இயல்பாகவே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதே பதில். அது சரி, மகிழ்ச்சியாக இருப்பது யார், இந்த உடலா? அல்லது ஆன்மாவா? புஷ்ட கிருஷ்ண: ஆன்மா. பிரபுபாதர்: மகிழ்ச்சியை விரும்புவது யார்? நான் இந்த உடலைப் பேணிப் பாதுகாக்க விரும்புகிறேன் - ஏன்? ஏனென்றால் நான் இந்த உடலுக்குள் இருக்கிறேன். நான் இந்த உடலை விட்டுச் சென்று விட்டால், இந்த உடலின் மகிழ்ச்சியை யார் நாடுவார்கள்? இந்த பொதுவான உண்மையை அவர்கள் உணரவில்லை. |
750401 - காலை நடைப்பயிற்சி - மாயாபூர் |